ஜம்மு காஷ்மீர்- போலீஸ் நிலையம் மீது குண்டு வீச்சு

  ஸ்ரீதர்   | Last Modified : 07 Jun, 2019 04:46 pm
terrorists-lob-grenade-at-sopore-police-station-two-policemen-injured

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் போலீஸ் நிலையம் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் 2 காவலர்கள் காயமடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளும் அத்து மீறி இந்திய எல்லையோர கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சபோர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையம் மீது தீவிரவாதிகள் இன்று மதியம் கையெறி குண்டு வீசி தப்பிச்சென்றனர்.

இதில் போலீஸ் நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 2 காவலர்கள் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close