ஜம்மு காஷ்மீர் - 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

  ஸ்ரீதர்   | Last Modified : 08 Jun, 2019 09:19 am
2-spos-among-4-militants-killed

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 2 போலீஸ் அதிகாரிகள் வீரமரணமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பஞ்சரான் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று இரவு 7 மணியளவில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது அந்த வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட தொடங்கினர்.

பதிலுக்கு ராணுவத்தினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். விடிய விடிய நடந்த இந்த துப்பாக்கி சண்டை இன்று காலை 7 மணியளவில் முடிவுக்கு வந்தது.

இந்த துப்பாக்கி சண்டையில் ஜெய்ஸ்ரீமுகமது தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 2 போலீஸ் அதிகாரிகள் வீரமரணமடைந்தனர். இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close