மத்திய பிரதேசம்- தண்ணீரின்றி 15க்கும் மேற்பட்ட குரங்குகள் சாவு

  ஸ்ரீதர்   | Last Modified : 08 Jun, 2019 10:11 am
15-monkeys-die-in-madhya-pradesh-forest-officials-blame-fight-for-water

மத்திய பிரதேச மாநிலத்தில் நிலவி வரும் கடும் வறட்சியால் தண்ணீரின்றி 15க்கும் மேற்பட்ட குரங்குகள் உயிரிழந்துள்ளன.

மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது கடும் வெப்பம் நிலவி வருகிறது. அங்குள்ள காடுகளில் ஏராளமான குரங்குள் உள்பட பல உயிரினங்கள் வசித்து வருகின்றன.

இந்நலிலையில் பாக்லி வனப்பகுதியில் மாடுகளை மேய்க்க சென்ற சிறுவன் அங்கு ஏராளமான குரங்குகள் இறந்து கிடப்பதை பார்த்துள்ளான். இதையடுத்து அவன் கிராமத்தினரிடம் குரங்குள் இறந்து கிடப்பதை பற்றி தெரிவித்துள்ளான்.

இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் அங்கு சென்று பார்த்த போது 15க்கும் மேற்பட்ட குரங்குள் இறந்து கிடந்தன. வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக தண்ணீரின்றி குரங்குகள் இறந்துள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close