பிரதமர் நரேந்திர மோடி குருவாயூர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்

  ஸ்ரீதர்   | Last Modified : 08 Jun, 2019 11:24 am
pm-modi-in-kerala-ahead-of-first-overseas-trip-of-his-second-term

கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வழிபாடு செய்தார்.

கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் வழிபாடு நடத்த பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் கொச்சி வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் அவரை மாநில ஆளுநர் சதாசிவம், மத்திய அமைச்சர் முரளிதரன் மற்றும் பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.

கொச்சியில் இருந்து திருச்சூரில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவர் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

பின்னர் துலாபாரத்தில் பிரதமர் ஒரு புறமும் மறுபுறம் தாமரை பூக்களுகம் வைக்கப்பட்டு துலாபார வழிபாடு நடத்தினார். முன்னதாக, பிரதமர் வருகையையொட்டி, குருவாயூர் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close