பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்- 8 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 09 Jun, 2019 10:22 am
three-killed-in-trinamool-bjp-clash-in-bengal

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

மேற்கு வங்க மாநிலம் ஹட்கட்ஜி என்ற பகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் இடையே பயங்கர மாேதல் ஏற்பட்டது.

பாஜகவின் கொடியை திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் அகற்றியதால் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பாஜகவை சேர்ந்த 5 தொண்டர்கள் கொல்லப்பட்டதாகவும், திரிணாமூல் காங்கிரஸ் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.

இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசிய பாஜக தலைவர் நிலைமையை விளக்கினார். இதையடுத்து பாஜக எம்பிகள் அப்பகுதியில் இன்று விசாரணை நடத்துவார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close