ஸ்ரீநகர்: துணை மேயருக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி.ரெய்டு!

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2019 02:03 pm
income-tax-department-conducted-raid-at-locations-of-srinagar-deputy-mayor

ஸ்ரீநகரின் துணை மேயர் ஷேக் இம்ரான் என்பவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வருத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு பிறகு காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது. தொடர்ந்து பயங்கரவாத செயலை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை தடுக்கவும், தேசிய புலனாய்வு முகமையின் மூலம் மத்திய அரசு  பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஓர் அம்சமாக பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக், ஆஸிஃபி அராபியா போன்றவர்களை காஷ்மீர் சிறையிலிருந்து தில்லியிலுள்ள திகார் சிறைக்கு இடமாற்றம் செய்து, அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன.

மேலும் ஜம்மு- காஷ்மீர் வங்கியின் தலைவர் பெர்வேஸ் அகமது நெங்ரூ மீதான பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் ஸ்ரீநகர் மாநகராட்சியின் துணை மேயருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close