நல்ல சம்பளமா?... அப்போ டைவர்ஸ் கேஸ்ல பொம்பளைங்க ஜீவனாம்சம் கேட்க  முடியாது !

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2019 04:59 pm
woman-with-adequate-financial-resources-isn-t-entitled-to-maintenance-from-husband-calcutta-high-court

நன்றாக சம்பாதிக்கும் ஒரு பெண், விவாகரத்து வழக்கில் தன் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கேட்க முடியாது என, கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பிஸ்வஜித் பாசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவில், "இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண், விவகாரத்து வழக்கு தொடர்ந்த தன் கணவர், ஜீவனாம்சமாக மாதந்தோறும் தமக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என கோரியுள்ளார். 
ஆனால் இப்பெண், மாதத்துக்கு 74 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். அதாவது, அவர் கேட்டுள்ள இடைக்கால ஜீவனாம்ச தொகையான 50 ஆயிரத்தை விட அதிகமாக சம்பளம் வாங்குகிறார். எனவே, ஜீவனாம்சம் கேட்க அவருக்கு உரிமையில்லை" என தமது தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close