மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம்! மம்தா, சந்திரசேகர் ராவ் புறக்கணிப்பு!

  ஸ்ரீதர்   | Last Modified : 15 Jun, 2019 12:11 pm
kcr-mamata-banerjee-to-skip-pm-modi-s-niti-aayog-meet-today

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 5வது பொது கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவும் கலந்து கொள்ள மாட்டார்கள் என கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 5வது பொது கூட்டம் குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெறுகிறது. 

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாக கூட்டணி அரசு 2-வது முறையாக பதவியேற்ற பிறகு, முதல்முறையாக நிதி ஆயோக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.  இந்த கூட்டத்தில், மேற்குவங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ளமாட்டார் என்று தெரிகிறது.

மாநிலத்திற்கு எந்த நிதி பலனையும் நிதி ஆயோக் தராததால், கூட்டத்தை புறக்கணிப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதேபோல், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவும் இந்த நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறார்.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close