'வாயு' புயல் மீண்டும் குஜராத்தை தாக்கக் கூடும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

  ஸ்ரீதர்   | Last Modified : 15 Jun, 2019 03:03 pm
cyclone-vayu-could-recurve-may-hit-gujarat-s-kutch-says-top-official

வாயு புயல் மீண்டும் குஜராத் மாநிலத்தை தாக்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குஜராத்தை மிரட்டிய 'வாயு' புயல் திடீரென தனது திசையை மாற்றி ஓமன் நோக்கி நகரத் துவங்கியது. இதனால், அம்மாநிலத்திற்கு பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வாயு புயல் மீண்டும் திசை மாறியுள்ளது. புதன் மற்றும் வியாழன் நள்ளிரவில் திசை மாறிய வாயு புயல், அடுத்த 48 மணி நேரத்தில்  குஜராத் கடற்கரையை தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கட்ச் பகுதியை ஜூன் 17- 18 ஆகிய தேதிகளில் தாக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக மிக தீவிர புயலாக இருந்த வாயு, வலுவிழந்து தீவிர புயல் அல்லது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக கடற்கரையை தாக்கக் கூடும் என்றும் புவி  அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்தார். 

மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அகமதாபாத் வானிலை ஆய்வு மைய இயக்குநர் மனோரமா மோஹந்தி, புயல் மீண்டும் திரும்பி கட்ச் அல்லது சவுராஷ்டிரா பகுதியை தாக்கும் என்றும் இப்போது கணிக்க முடியாது. 

அடுத்த 48 மணி நேரத்தில் இது திசை மாறும் என்று அறிக்கைகள் கூறுகின்றன. மேலும்,  கடல் பகுதியிலேயே வலுவிழந்து செல்லவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close