கர்நாடகா- தனியார் தொழிற்சாலைக்கு நிலம் ஒதுக்குவதற்கு எதிராக பாஜக போராட்டம்

  ஸ்ரீதர்   | Last Modified : 15 Jun, 2019 03:03 pm
bjp-state-chief-bs-yeddyurappa-and-other-bjp-leaders-during-the-party-s-all-night-dharna-in-bengaluru

தனியார் நிறுவனத்திற்கு முறைகேடாக நிலத்தை விற்க முயற்சி நடப்பதாக கூறி கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக அரசு சந்தூர் என்ற இடத்தில் மூன்று ஆயிரத்து 600 ஏக்கர் நிலத்தை ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முயற்சி எடுத்துவருகிறது.

இதில் முறைகேடு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, அம்மாநில பாஜக போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தது.

அதன்படி முன்னாள் முதலமைச்சரும் அம்மாநில பாஜக தலைவருமான எடியூரப்பா உள்ளிட்ட பாஜகவினர் நேற்று பகல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இரவும் படுத்துறங்கி தர்ணாவில் ஈடுபட்ட பாஜகவினர், தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close