பீகார்- மூளைக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 84ஆக உயர்வு

  ஸ்ரீதர்   | Last Modified : 16 Jun, 2019 04:15 pm
bihar-encephalitis-outbreak-toll-rises-to-84

பீகார் மாநிலம் முசாபர்நகரில் மூளை காய்ச்சல் நோய் காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது.

பின்னர் பாதிப்புகள் அறியப்பட்ட குழந்தைகளுக்கு முசாபர்பூரில் உள்ள  ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் முசாபூர் சென்று அங்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் குறித்து கேட்டறிந்தார். 

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒரு குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது.

இதையடுத்து முசாபர்பூர் நகரில் மூளை காய்ச்சலுக்கு இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக மூளை காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் 1 முதல் 10 வயது குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close