காதலர்களே உஷார்- காதலன் மீது ஆசிட் வீசிய காதலி!

  ஸ்ரீதர்   | Last Modified : 17 Jun, 2019 01:09 pm
delhi-woman-throws-acid-on-boyfriend-for-refusing-to-marry-her

டெல்லியில் திருமணம் செய்ய மறுத்த காதலனின் முகத்தில் ஆசிட் வீசிய காதலியை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் உள்ள விகாசபுரி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனிடம் கூறியுள்ளார்.

இதற்கு மறுத்த காதலன் இத்துடன் தங்களது காதலை மறந்து விடுவோம் என்று அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த இளம்பெண் காதலனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார்.

அதன்படி காதலனை செல்போனில் தொடர்பு கொண்டு கடைசியாக தன்னை சந்திக்க வருமாறு அழைத்துள்ளார். உடனே இருசக்கர வாகனத்தில் வந்த காதலனுடன் அந்த இளம்பெண் சென்றுள்ளார். சிறிது தூரம் சென்ற பின் காதலனிடம் ஹெல்மெட் அணிந்திருப்பதால் தான் பேசுவது கேட்காது என்றும் அதை கழற்றுமாறும் கூறியுள்ளதார்.

இதையடுத்து ஹெல்மெட்டை கழற்றிய காதலன் முகத்தில் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து வீசியுள்ளார். இதில் நிலைகுலைந்து போன காதலன் மற்றும் அந்த இளம்பெண் இருவரும் பைக்கிலிருந்து தடுமாறிக் கீழே விழுந்துள்ளனர். இதைக்கண்ட மற்ற வாகன ஓட்டிகள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்தச் சம்பவம் கடந்த 11ம் தேதி நடைபெற்றுள்ளது. போலீஸ் விசாரணையில் காதலர்கள் இருவரும் தாங்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது யாரோ, அவர்கள் மீது ஆசிட் வீசி விட்டதாக வாக்குமூலம் அளித்திருந்தனர். நீண்ட நாட்களாக துப்பு துலக்க முடியாத போலீசாருக்கு அந்த இளம்பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அந்த இளம்பெண்ணின் கையில் சிறிய அளவில் தான் ஆசிட் பட்டிருந்தது. இதனால் அந்த இளம்பெண்ணை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர். நீண்ட நேரத்திற்கு பின் அந்த இளம்பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் அந்த இளம்பெண்ணை கைது செய்தனர். 

திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன் மீது ஆசிட் வீசிய பெண்ணால், காதலர்கள், அவர்களது காதலியருடன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. ஜாக்கிரதை காதலர்களே!

newst.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close