ஜம்மு காஷ்மீர்- காயமடைந்த ராணுவ மேஜர் வீரமரணம்

  ஸ்ரீதர்   | Last Modified : 17 Jun, 2019 04:51 pm
army-major-injured-in-encounter-succumbs-to-his-injuries-in-j-k

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும்  இடையில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் காயமடைந்த ராணுவ மேஜர் வீரமரணமடைந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம்  அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பிதூரா என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற ராணுவ வீரர்கள் மீது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பதிலுக்கு ராணுவ வீரர்களும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மேலும் ஒரு ராணுவ மேஜர் உள்பட 3 வீரர்கள் காயமடைந்தனர். இந்நிலையில் காயமடைந்த ராணுவ மேஜருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் அது பலனளிக்காமல் அவர் வீரமரணமடைந்ததாக ராணவ செய்திப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close