இடம், பொருள் தெரியாமல் கிரிக்கெட் ஸ்கோர் கேட்டு சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் !

  Newstm Desk   | Last Modified : 17 Jun, 2019 07:59 pm
bihar-health-minister-mangal-pandey-inquires-about-india-pakistan-score-during-meeting-on-aes-deaths-in-muzaffarpur

பிகார் மாநிலம், மூசாஃபர்பூர் நகரில் மூளைக் காய்ச்சலால் இதுவரை 100 -க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதும், அதில் அதிகம் பேர் குழந்தைகள் என்பதும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மூளைக்காய்ச்சலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய அதிரடி நடவடிக்கைகள் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம், முசாஃபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அஸ்வனி குமார் சௌபே, பிகார் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது,  "அமைச்சர் மங்கள் பாண்டே, மான்செஸ்டரில் மழை நின்றுவிட்டதா?,  இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்  ஆரம்பித்துவிட்டதா?, இந்தியா எவ்வளவு ரன்? என இடம், பொருள் தெரியாமல், ஆர்வ கோளாறில் கேட்டுள்ளார்.

மூளைக்காய்ச்சலால் கொத்து கொத்தாக குழந்தைகள் இறந்துவரும் நிலையில், அதைப் பற்றி கவலை கொள்ளாமல், மாநில சுகாதார அமைச்சரே கிரிக்கெட் ஸ்கோர் கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close