சட்டீஸ்கர்- சமாஜ்வாதி கட்சி தலைவர் சுட்டுக்கொலை

  ஸ்ரீதர்   | Last Modified : 19 Jun, 2019 02:47 pm
naxals-kidnap-and-kill-samajwadi-party-leader-in-chhattisgarh-s-bijapur

சட்டீஸ்கர் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவரை, நக்சலைட்டுகள் கடத்தி சென்று சுட்டுக்கொன்றனர்.

சட்டீஸ்கர் மாநிலத்தில் பிஜப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் பூனம். இவர் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர்.

சாலை கான்ட்ராக்டரான இவர் நேற்று மரிமலா கிராமத்தில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை பார்வையிடச் சென்றார்.

அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மரிமலா கிராமம் அமைந்து பகுதியில் உள்ள மலையின் மீது ரத்த வெள்ளத்தில் சந்தோஷ பூனத்தின் உடலை போலீசார் கைப்பற்றினர்.

அதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நக்சலைட்டுகள் பூனத்தை கடத்திச் சென்று பின்னர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சந்தோஷ் பூனம் பிஜப்பூர் தொகுதியிலிருந்து சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close