கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி கலைப்பு!

  ஸ்ரீதர்   | Last Modified : 19 Jun, 2019 03:17 pm
aicc-dissolves-karnataka-congress-committee

கர்நாடக காங்கிரஸ் கமிட்டியை கலைப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. முதல்வராக ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவே கௌடாவின் மகன் குமாரசாமி பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தலைமைக்கு புகார்கள் சென்றன.

கர்நாடக முதல்வர் குமாரசாமி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, நான் தினமும் எண்ணற்ற பிரச்சைகளை சந்தித்து வருகிறேன். அதை வெளியே சொல்ல முடியவில்லை. இருந்தும் மக்கள் பிரச்சினைகளை நான் தீர்க்க வேண்டும்.

கூட்டணி ஆட்சி சுமூகமாக நடைபெற வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் கர்நாடக மாநிலத் தலைவர் மற்றும் செயல் தலைவர் பதவியை தவிர அனைத்து நிர்வாகிகளின் பொறுப்புகளையும் கலைத்து விட்டதாக காங்கிரஸ் மேலிடம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close