சிறுவனிடம் "அந்த மாதிரி" விளையாடிய ஸ்போர்ட்ஸ் டீச்சர் கைது!

  Newstm Desk   | Last Modified : 19 Jun, 2019 07:29 pm
sports-teacher-in-pune-sexually-assaults-minor-boy-has-arrested

மகாராஷ்டிர மாநிலம், புனேவில் பள்ளிச் சிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்த உடற்கல்வி ஆசிரியர் இன்று கைது செய்யப்பட்டார்.

புனே நகரின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிபவர் அனுராக் ஹிங்கி.  இவர் அப்பள்ளியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு பல மாதங்களாக தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளார். அத்துடன், இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என்றும் அச்சிறுவனை மிரட்டியுள்ளார்.

இருப்பினும் எப்படியோ சிறுவனின் பெற்றோருக்கு விஷயம் தெரியவர அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த அவர்கள், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஆசிரியர் மீதான குற்றச்சாட்டு உறுதியாகவே, போஸ்கோ சட்டத்தின்கீழ் அவரை போலீஸார் கைது செய்தனர்.

பள்ளி வளாகத்தில் விளையாட்டு துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள அறையில் வைத்து, ஆசிரியர் சிறுவனிடம் பாலியல் ரீதியாக விளையாடியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close