டெல்லி- அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து

  ஸ்ரீதர்   | Last Modified : 20 Jun, 2019 12:49 pm
fire-at-10-storeyed-building-in-delhi-100-residents-rescued

டெல்லியில் உள்ள 10 மாடி குடியிருப்பு வளாகத்தில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த குடியிருப்பில் இருந்த 100 பேர் எவ்வித பாதிப்புகளுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.

டெல்லியில் உள்ள பிதம்புரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை 1 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு 15 வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் அந்த குடியிருப்பில் இருந்த 100 பேரை எவ்வித பாதிப்புகளுமின்றி பத்திரமாக அங்கிருந்து மீட்டனர். மேலும் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீவிபத்தில் வீடுகளில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாயின. இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close