மேற்கு வங்கம்- இரு தரப்பினரிடையே பயங்கர கலவரம்- இருவர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 20 Jun, 2019 04:44 pm
2-killed-in-clashes-near-kolkata-mamata-banerjee-orders-urgent-meeting

மேற்கு வங்க மாநிலத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இன்று காலை இரண்டு தரப்பினருக்கு இடையே பயங்கர கலவரம் ஏற்பட்டது. மோதலின் போது இருதரப்பினரும் பெட்ரோல் குண்டுகள் வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இந்த கலவரத்தில் 17 வயது இளைஞர் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கலவரம் குறித்து தகவலறிந்த முதல்வர் மம்தா பானர்ஜி உயர்மட்ட குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சம்பவம் நடந்த இடத்தின் அருகே புதிதாக கட்டப்பட்ட போலீஸ் நிலையம் இன்று  திறக்கப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close