ஹிமாச்சல்- பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 44 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Jun, 2019 11:36 am
44-die-as-bus-rolls-down-kullu-gorge

ஹிமாச்சல பிரதேசத்தில்தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 44 பேர் உயிரிழந்தனர்.

ஹிமாச்சல பிரதசே மாநிலம் குலு மாவட்டத்தில் உள்ள பஞ்சார்- காடா குஷைனி சாலையில் இன்று காலை தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. இதில் பேருந்தில் பயணம் செய்த 44 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 35 பேர் படுகாயங்களுடன் குலுவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

பேருந்தில் அதிக பயணிகள் பயணம் செய்ததே விபத்துக்கு காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close