மும்பை- அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Jun, 2019 11:38 am
fire-breaks-out-in-high-rise-building-in-wadala-15-suffer-from-suffocation

மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 15 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

மும்பையில் உள்ள வடாலா பகுதியில் உள்ள ராம் நகரில் 21 அடுக்குகள் கொண்ட குடியிருப்பு கட்டடம் உள்ளது. இங்கு இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் குடியிருப்பில் இருந்த 9 பெண்கள் உள்பட 15 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close