கர்நாடகாவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு- தேவேகவுடா பேட்டி

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Jun, 2019 01:06 pm
mid-term-polls-will-be-held-in-karnataka-says-deve-gowda

கர்நாடக சட்டப்பேரவைக்கு திடீர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று தேவகவுடா அறிவித்துள்ளார். இதனால் கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வரும் என தெரிகிறது.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியில் உள்ளது. முதல்வராக குமாரசாமி உள்ளார்.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தோல்வியையடுத்து மதசார்பற்ற ஜனதள மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், ஆட்சியை சுமூகமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றும் கூறினார்.

மேலும் கர்நாடகாவில் விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்த்தார். இதன் மூலம் கர்நாடகவில் கூட்டணி ஆட்சி நீடிக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close