உ.பி.- பள்ளி மாணவர்களுக்கு காதி துணியிலான சீருடைகள்

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Jun, 2019 02:01 pm
khadi-to-be-used-for-school-uniforms-in-uttar-pradesh-yogi-adityanath

காதி பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களின் சீருடைகளுக்கு காதி துணிகளை பயன்படுத்த அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காதி துணிகளால் ஆன சீருடைகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் அனுபமா ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காதி துணியிலான சீருடைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் 4 மாவட்டங்களில் வரும் கல்வியாண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இதன் மூலம் காதி பொருட்களைபயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்க முடியும் என்று செய்தியாளர்களிடம் உத்தரப்பிரதேச மாநில கல்வி அமைச்சர் அனுபமா ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close