அரை மணி நேரத்தில் அந்தர் பல்டி அடித்த தேவேகவுடா!

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Jun, 2019 01:58 pm
devegowda-changes-his-stand-about-congress

கர்நாடகாவில் தேர்தல் வரும் என்று கூறியது உள்ளாட்சி தேர்தலை குறித்தே நான் குறிப்பிட்டேன் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா அரை மணி நேரத்தில் அந்தர் பல்டி அடித்தார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், ஆட்சியை சுமூகமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருவதிலை என்றும், இதன் காரணமாக சட்டப்பேரவைக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா செய்தியாளர்களிடம் இன்று காலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான் உள்ளாட்சி தேர்தலை பற்றி மட்டுமே குறிப்பிட்டதாக அவர் அடுத்த அரை மணி நேரத்தில் அந்தர் பல்டி அடித்துள்ளார்.

மேலும் தனது மகன் குமாரசாமி தலைமையிலான ஆட்சி மேலும் 4 ஆண்டுகள் சுமூகமாக நடைபெறும் என்றும் காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் கட்சிகளிடையே நல்ல புரிதல் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close