காய்கறிக்காரரிடம் பேரம் பேசியவர் கத்தியால் குத்தி கொலை

  கிரிதரன்   | Last Modified : 25 Jun, 2019 05:32 pm
mumbai-vegetable-vendor-stabs-customer-to-death-over-rs-10-in-dadar

காய்கறி விலையில் 10 ரூபாய் குறைக்கச் சொல்லி பேரம் பேசிய வாடிக்கையாளரை, காய்கறி கடைக்காரர் கத்தியால் குத்திய சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச்  சேர்ந்த முகமது ஹனீஃப் என்பவர், தாதர் பகுதியில் அமைந்துள்ள மார்க்கெட்டில், காய்கறி வாங்க நேற்றிரவு சென்றுள்ளார். காய்கறிகளின் விலையில் 10 ரூபாய் குறைக்கச் சொல்லி,  கடைக்காரரிடம் அவர் பேரம் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமைடந்த கடைக்காரர், காய்கறிகளை நறுக்குவதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து ஹனீஃப்பின் கழுத்திலும், கைகளிலும் சரமாரியாக குத்தியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த  ஹனீஃப்பை மீட்ட போலீஸார், அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர். ஆனால், முகமது ஹனீஃப் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, இச்சம்பவத்துக்கு காரணமான காய்கறி கடைக்காரரை, மும்பை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close