ஒடிசா: டிக்டாக் செய்த செவிலியர்கள் மீது நடவடிக்கை!

  ஸ்ரீதர்   | Last Modified : 28 Jun, 2019 12:55 pm
nurses-who-recorded-tiktok-videos-in-odisha-hospital-told-to-go-on-leave

ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் டிக்டாக் வீடியோ பதிவு செய்து அதை வெளியிட்ட 4 செவிலியர்கள் விடுமுறையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஒடிசா மாநிலம் மாலகன்கிரி மாவட்டத்தில் உள்ள செவிலியர்கள் 4 பேர் பணி நேரத்தில் டிக்டாக் வீடியோ பதிவு செய்து அதை வெளியிட்டனர்.

இது குறித்து மாவட்ட தலைமை அதிகாரி அஜித் குமார் மொஹன்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 4 செவிலியர்களையும் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறையில் செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், அவர்கள் மீது துறை ரதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close