ஜூலை 6ம் தேதி பிரதமர் மோடி வாரணாசி வருகை!

  ஸ்ரீதர்   | Last Modified : 29 Jun, 2019 12:33 pm
pm-to-flag-off-bjp-s-membership-drive-from-varanasi

இரண்டாவது முறையாகப் பிரதமராக பதவியேற்ற பின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வருகிற ஜூலை 6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 6ம் தேதி சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். அப்போது பாரதிய ஜனதா கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.

மேலும் பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தின் போது 27 லட்சம் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன என்று பாஜக தலைவர் சுனில் ஓஜா தெரிவித்துள்ளார்.

மேலும் பள்ளி சிறுவர்களும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவார்கள் என்றும் பாரிதிய ஜனதா கட்சிக்கான மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் 27ம் தேதி வாரணசி தொகுதிக்குச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newst.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close