மும்பையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை!

  ஸ்ரீதர்   | Last Modified : 29 Jun, 2019 12:35 pm
mumbai-heavy-rainfall-to-lash-city-neighbouring-areas-for-next-3-days-imd-predicts

மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தொடர்ந்து நீடிக்கும் கனமழையின் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

புனே நகரில் உள்ள கோந்தாவா பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 60 அடி சுற்றுச் சுவர் வெள்ளிக்கிழமை இரவு இடிந்து தரைமட்டமானது.

இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

இதனிடையே மும்பையில் நேற்று ஒரே நாளில் மழை பாதிப்பு காரணமாகவும், மின்னல் தாக்கியும், மின்சார விபத்து காரணமாகவும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மழை காரணமாக சாலை, விமானம் மற்றும் ரெயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், மாநிலம் முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு புயல் சின்னம் நீடிப்பதால் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close