முன்னாள் முதல்வருக்கு பாதுகாப்பு அதிரடியாக குறைப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 29 Jun, 2019 12:51 pm
andhra-govt-slashes-security-cover-to-chandrababu-naidu-gives-4-constables

ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பு அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் ஆந்திரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியடைந்தது. ஒய் எஸ் ஆர் கட்சி வெற்றி பெற்று ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி. இந்நிலையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பு அதிரடியாக குறைத்து ஜெகன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அவருக்கு 4 காவலர்கள் மட்டுமே இனி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். முதல்வராக இருந்த போது 2 ஆய்வாளர்கள் தலைமையில் 15 காவலர்கள் நாயுடுவுக்கு பாதுகாப்பு வழங்கி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தவிர மத்திய அரசின் இசட் பிரிவு பாதுகாப்பும் அவருக்கு அளிக்கப்பட்டு வந்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close