குடிபோதையில் சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவரை நைய புடைத்த நோயாளியின் உறவினர்கள்

  ஸ்ரீதர்   | Last Modified : 29 Jun, 2019 06:07 pm
video-shows-doctor-allegedly-drunk-being-beaten-up-in-uttar-pradesh

உத்தரப்பிரதேச மாநிலத்தில், குடிபோதையில் சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவரை நோயாளியின் உறவினர்கள் நைய புடைத்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் கஸ்கன்ஞ் மாவட்டத்தில் விபத்தில் காயமடைந்தவரை, அங்குள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு, அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக அழைத்து வந்திருந்தனர்.

அப்போது, குடிபோதையில் இருந்த மருத்துவர், சிகிச்சை அளிக்க மறுத்து நோயாளியின் உறவினர்களை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள், மருத்துவரை நைய புடைத்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமுக வலை தளங்களில் வைரலாகி உள்ளன.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close