ஐதராபாத்- கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

  ஸ்ரீதர்   | Last Modified : 30 Jun, 2019 10:20 am
cricket-betting-racket-busted-4-held-in-hyderabad

ஐதராபாத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிலர் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் குறிப்பிட்ட இடத்தில் சிலர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்து சோதனை நடத்தினர்.

அப்போது அங்கிருந்த 4 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

அவர்களிடமிருந்து 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 4 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சூதாட்டத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி விஷால் லோத்யா என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close