பப்ஜி படுத்தும் பாடு- அண்ணனை குத்தி கொலை செய்த தம்பி!

  ஸ்ரீதர்   | Last Modified : 30 Jun, 2019 02:32 pm
minor-kills-brother-for-not-letting-him-play-pubg-game-in-thane

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பப்ஜி விளையாடதே என்று திட்டிய அண்ணனை அவனுடைய தம்பி கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி நகரில் 15 வயது சிறுவன் வீட்டில் அமர்ந்து இரவு முழுவதும் தொடர்ந்து பப்ஜி விளையாடி கொண்டிருந்துள்ளான்.

இதை பார்த்த அந்த சிறுவனின் 19 வயது சகோதரன் முகமது ஷேக் என்பவன், ஏன் தொடர்ந்து பப்ஜி விளையாடி கொண்டிருக்கிறாய் என்று கண்டித்துள்ளான்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், சகாேதரன் என்றும் பாராமல் தனது அண்ணனை கத்திரிக்கோலால் சரமாரியாக குத்தியுள்ளான். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டான்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த  முகமது ஷேக்கை அவனது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அவனை பரிசோத்தித்த மருத்துவர்கள் முகமது ஷேக் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் தப்பியோடிய சிறுவனை கைது செய்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close