ஜம்மு காஷ்மீர்- கிராமவாசி மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு!

  ஸ்ரீதர்   | Last Modified : 30 Jun, 2019 03:25 pm
man-injured-as-militants-open-fire-in-pulwama

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் கிராமவாசி ஒருவர் படுகாயமடைந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில்பல்போரா பகுதியில் உள்ள நவ்னகிரி என்ற கிராமத்தில் உள்ள அலி முகமது என்பவரது வீட்டிற்குள் நேற்று நள்ளிரவு புகுந்த தீவிரவாதிகள் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதில் படுகாயமடைந்த அலி முகமதை போலீசார் மீட்டு புல்வாமாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த துப்பாக்கி சூடுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close