பெண் வன அதிகாரியை கம்பால் தாக்கிய எம்எல்ஏவின் சகோதரர்!

  ஸ்ரீதர்   | Last Modified : 30 Jun, 2019 05:14 pm
trs-workers-thrash-woman-forest-officer-in-telangana

தெலங்கானா மாநிலத்தில் பெண் வன அதிகாரியை, எம்.எல்.ஏ. ஒருவரின் சகோதரரும், அவருடைய ஆட்களும் கம்பால் அடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவில் உள்ள ஆசிப்பாபாத் மாவட்டத்தில் உள்ள சிர்புர் கிராமத்தில் வன அதிகாரிகள் இன்று மரக்கன்று நடும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு, டிஆர்எஸ் கட்சியினர் ஆக்கிரமித்திருந்த நிலப் பகுதியில் வனத் துறையினர் மரக்கன்றுகளை நட முயன்றனர்.

அப்பாேது, டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ கோனேறு கொன்னபாவின் சகோதரர் கிருஷ்ணா என்பவர் உள்பட அவரது ஆதரவாளர்கள் வனத்துறையை சேர்ந்த பெண் அதிகாரி அனிதா உள்பட வனத் துறையினரை கண்மூடித்தனமாக கம்புகளால் தாக்கினர்.

இதில் காயமடைந்த வன அதிகாரி உள்ளிட்டோர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணா அப்பகுதியில் ஜில்லா பரிஷத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close