சிம்லா- பேருந்து கவிழ்ந்து 3 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 01 Jul, 2019 10:46 am
shimla-3-killed-as-school-bus-rolls-down-hill

சிம்லாவில் பள்ளிக்கூட பேருந்து மலையிலிருந்து கீழே கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.

ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் இன்று காலை காலினி என்ற பகுதியில் பள்ளிக்கூட பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மலையிலிருந்து கீழே கவிழ்ந்து உருண்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 2 மாணவர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close