சூரத் விமான நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்து தரையிறங்கிய விமானம்

  ஸ்ரீதர்   | Last Modified : 01 Jul, 2019 11:18 am
spicejet-plane-overshoots-runway-on-landing-none-hurt

சூரத்தில் நேற்று இரவு ஸ்பைஸ் ஜெட் விமானம் கட்டுப்பாட்டை இழந்து  தரையிறங்கியது. எனினும் விமானியின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

குஜராத் மாநிலம் சூரத் விமான நிலையத்தில் போபாலில் இருந்து வந்த விமானம் நேற்று இரவு தரையிறங்கியது.

அப்போது விமானியின் கட்டுப்பாட்டை விமானம் இழந்து தாறுமாறாக ஓடியது. எனினும் விமானியின் சாதுர்யத்தால் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் பயணம் செய்த பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டனர். மழை மற்றும் காற்று பலமாக வீசியதால் இந்த சம்பவம் ஏற்பட்டதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close