மஹாராஷ்டிரா- இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளச்சாராயம் பறிமுதல்!

  ஸ்ரீதர்   | Last Modified : 01 Jul, 2019 02:24 pm
palghar-police-raids-two-locations-and-seizes-country-made-liquor

மஹாராஷ்டிர மாநிலத்தில் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புடைய கள்ளச்சாரயம் பறிமுதல் செய்யப்பட்டது.

மஹாராஷ்டிர மாநிலம் பல்கார் நகரில் சிலர் கள்ளச்சாரயம் விற்பனை செய்வதாக மதுவிலக்கு தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் இன்று குறிப்பிட்ட இடத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தின் மதிப்பு இரண்டரை லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கள்ளச்சாரயம் பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close