கர்நாடகத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ இன்று ராஜினாமா

  ஸ்ரீதர்   | Last Modified : 01 Jul, 2019 05:05 pm
karnataka-mla-submits-resignation

கர்நாடக மாநிலத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்றைக்கு ராஜினாமாவைத் தாக்கல் செய்துள்ள இரண்டாவது காங்கிரஸ் எம்எல்ஏ இவர் என்பது குறிப்பிடத்தக்கது

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குமாரசாமி முதல்வராக உள்ளார்.

மக்களவை தேர்தலில் தோல்வியை சந்தித்த பின் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளுக்கிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் விஜயநகர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் இன்று  காலை  அவருடைய பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கோகாக் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் ஜார்கோளி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று அவர் சட்டபேரவை தலைவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். இன்றைக்கு ராஜினாமாவைத் தாக்கல் செய்துள்ள இரண்டாவது காங்கிரஸ் எம்எல்ஏ இவர் என்பது குறிப்பிடத்தக்கது

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close