மும்பை கனமழை: 16 பேர் உயிரிழப்பு

  அனிதா   | Last Modified : 02 Jul, 2019 10:42 am
16-dead-in-mumbai-heavy-rains

மும்பை மலார்டு பகுதியில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 16 பேர் உயிரிழந்துள்ளனர். 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே உள்ளிட்ட பல இடங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் செல்லமுடியாத நிலை உருவாகியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விமான சேவை மற்றும் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 

மும்பை நகரின் பல இடங்களில் 20 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மலார்டு பகுதியில் சுவர் இடிந்து விழுந்து 16 பேர் உயிரிழந்துள்ளனர். அப்பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த 2 நாட்களுக்கு மும்பையில் கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close