மும்பையில் கனமழை- 52 விமானங்கள் ரத்து

  ஸ்ரீதர்   | Last Modified : 02 Jul, 2019 10:19 am
54-flights-diverted-52-cancelled-at-mumbai-s-chhatrapati-shivaji-maharaj-international-airport

மும்பையில் பெய்து வரும் கன மழையால் சத்திரபதி சிவாஜி விமான நிலையத்தில் 52 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, பூனே உள்ளிட்ட பல இடங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.

இதனால் சாலைகளில் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் செல்லமுடியாத நிலை உருவாகியுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் 52 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் மும்பைக்கு வரவேண்டிய 54 விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. மும்பையில் கன மழை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என மண்டல ஆய்வு மையம் தெரிவித்துள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close