உ.பி.- இனிப்பு கடைக்குள் லாரி புகுந்து 2 பேர் பலி!

  ஸ்ரீதர்   | Last Modified : 02 Jul, 2019 12:25 pm
uttarpradesh-a-truck-rammed-into-wall-of-a-sweet-shop-in-utrethia-today-2-dead

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இனிப்பு கடைக்குள் சரக்கு லாரி புகுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதச மாநிலம் லக்னோவில் உள்ள உத்ரத்தியா என்ற பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி அங்குள்ள இனிப்பு கடைக்குள் புகுந்தது.

இதில் கடையில் நின்று கொண்டிருந்த 2 பேர் லாரி மோதி விபத்துக்குள்ளாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் லாரிக்குள் சிக்கியுள்ள கிளினரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close