இறுதி சடங்கின் போது உயிர்த்தெழுந்த இளைஞரால் பரபரப்பு!

  ஸ்ரீதர்   | Last Modified : 02 Jul, 2019 04:13 pm
man-allegedly-declared-dead-by-hospital-wakes-up-just-before-burial

லக்னோவில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட இளைஞருக்கு இறுதி சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த போது உயிர் இருப்பது தெரியவந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் முகமது புர்கான் என்ற 20 வயது இளைஞர் சாலை விபத்தில் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் முகமது புர்கான் இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் அவரது உறவினர்கள் வீட்டுக்கு கொண்டு வந்தனர். பின்னர் இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இறுதி சடங்கு முடியும் தருவாயில் இளைஞரின் கைகளில் அசைவு இருப்பதை உறவினர்கள் கவனித்தனர். உடனடியாக இளைஞர் முகமது புர்கானை ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முகமது புர்கானை சோதித்த மருத்துவர்கள் அவருக்கு உயிர் இருப்பதை உறுதி செய்தனர். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close