குற்றவாளிகளின் நாயை பராமரித்து வரும் பாசக்கார போலீஸ்!

  ஸ்ரீதர்   | Last Modified : 03 Jul, 2019 12:03 pm
entire-family-jailed-for-killing-five-people-police-responsible-for-taking-care-of-sultan

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரும்  அவர்கள் செய்த குற்றம்காரணமாக சிறைக்கு சென்ற பின் அவர்கள் வளர்த்து வந்த நாயை போலீசார் பராமரித்து வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக 5 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

கொலையில் தொடர்புடைய ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை பஜாரியா போலீசார் கைது செய்தனர். குற்றவாளிகள் வளர்த்து வந்த நாய் சுல்தானும் போலீஸ் நிலையத்திலேயே தங்கியது.

இந்நிலையில் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் சுல்தான் போலீஸ் நிலையத்தை விட்டுச் செல்ல மறுத்து விட்டது. செய்வதறியாத போலீசார் சுல்தானை போலீஸ் நிலையத்திலேயே வைத்து உணவிட்டு பராமரித்து வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close