அதிகாரியிடம் அநாகரிமாக நடந்து கொண்ட எம்எல்ஏவுக்கு ஜெயில்!

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2019 07:33 pm
maharashtra-nitesh-rane-and-his-supporters-sent-to-judicial-custody-for-14-days-by-kankavali-court

மகாராஷ்டிர மாநிலம், கங்கௌலி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ -வான நிதீஷ் ராணே மற்றும் அவரது ஆதரவாளர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, கங்கௌலி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மாநில நெடுஞ்சாலை துறை துணைப் பொறியாளரின் மீது செம்மண் கலந்த நீரை ஊற்றி, அவரிடம் அநாகரிமாக நடந்து கொண்ட குற்றத்துக்காக நிதீஷ் ராணே மற்றும் அவரது ஆதரவாளர்களை கங்கௌலி நகர போலீஸார் கடந்த 4 -ஆம் தேதி கைது செய்தனர். அவர்களின் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 மும்பை - கோவா மாநில நெடுஞ்சாலையில் எம்எல்ஏ நிதீஷ் ராணே, கடந்த 4 -ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை குண்டும் குழியுமாக, சேறும் சகதியுமாய் இருந்ததால் எம்எல்ஏ ஆத்திரமடைந்துள்ளார்.

அவரது ஆத்திரத்தை உணர்ந்த அவரது ஆதரவாளர்கள், சாலையை ஏன் முறையாக பராமரிக்கவில்லை என, நெடுஞ்சாலை துறையின் துணைப் பொறியாளர் பிரகாஷ் ஷிடேகரிடம் கேட்டவாரே, அவர் மீது செம்மண் கலந்த தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்தனர். அத்துடன் அவரது கைகளை கயிறால் கைட்டியும் தாக்கினர். இதுதொடர்பான வழக்கில் எம்எல்ஏ தற்போது நீதிமன்ற காவலில் சிறைக்கு சென்றுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close