பாம்பும் கையுமாக வந்த வீரமங்கை...மிரண்டு போன டாக்டர்கள்!

  கிரிதரன்   | Last Modified : 09 Jul, 2019 08:53 pm
mumbai-woman-shows-presence-of-mind-carries-snake-to-hospital-after-it-bit-her

பாம்பென்றால் படையும் நடுக்கும் என்பார்கள். ஆனால், தன்னையும், தன் மகளையும் கொத்திய பாம்பை கையுடன் பிடித்த வீரமங்கை ஒருவர், அந்த பாம்பையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அதிசய சம்பவம் மும்பையில் நிகழ்ந்துள்ளது.

மும்பை தாராவியின் பால்கிபூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் இன்று காலை பாம்பு புகுந்துள்ளது. சமையலறையில் டிபன் சாப்பிட்டு கொண்டிருந்த அந்த வீட்டின் இளம்பெண்ணை பாம்பு கொத்தியுள்ளது. இதுபோன்ற சூழலில், யாராக இருந்தாலும்  ஐயையோ என்னை பாம்பு கடிச்சிடுச்சின்னு கத்தியபடி, பதற்றமடைய தான் செய்வார்கள். 

ஆனால், அந்த இளம்பெண்ணின் தாய் சுல்தானா கான் (32), தன் மகளை கடித்த பாம்பை, தைரியமாக தன் கையால் பிடித்துள்ளார். அப்போது அவருடைய கைவிரலிலும் பாம்பு கொத்தியுள்ளது. இருந்தாலும் அந்த பாம்பை விடாமல் அசால்ட்டாக கையில் பிடித்துபடி, தன் மகளுடன் பாம்பையும் காரில் அழைத்து கொண்டு கூலாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார் சுல்தானா.

தங்களை கடித்த பாம்பு எந்த வகையைச் சேர்ந்தது என்பதை மருத்துவர்கள் அறிந்தால், சிகிச்சை தர வசதியாக இருக்குமே என்றுதான், பாம்பையும் கையோடு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்ததாக அந்த வீரமங்கை சொன்னதை கேட்டு, மருத்துவமனையில் இருந்தவர்கள் ஒரு கணம் திகைத்து போனார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close