மும்பை: 4 மாடி கட்டடம் சரிந்து விழுந்ததில் 40க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிப்பு!

  அனிதா   | Last Modified : 16 Jul, 2019 02:36 pm
building-collapse-site-in-dongri

மும்பை டான்கிரி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் உள்ள டான்கிரி பகுதியில் 100 ஆண்டு பழமை வாய்ந்த 4 மாடி குடியிருப்பு கட்டடம் இன்று மதியம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த கட்டிடத்தில் 15 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில், சுமார் 40க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டுகும் முயற்சியில் போலீசார்,  தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 2 பேர் சடலமாகவும், 5 பேர் காயங்களுடனும் மீட்கப்பட்டுள்ளனர். 

இந்த கட்டட விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ள மகாராஷ்டிரா முதலமைச்சர், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close