மெத்தையில் ஹாயாக படுத்திருக்கும் புலி : வைரலாகும் புகைப்படம்! 

  கண்மணி   | Last Modified : 18 Jul, 2019 04:29 pm
tiger-relaxes-on-bed

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள உலக புகழ் பெற்ற காசிரங்கா தேசிய பூங்காவின் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அதோடு பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த  பல வனவிலங்குகள் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டாலும், அரிய வகை விலங்குகள் பல உயிரிழந்துள்ளன.

இந்நிலையில் வெள்ளப் பெருக்கிலிருந்து தப்பித்து அருகில் உள்ள கிராமத்திற்குள்  புகுந்துள்ள புலி ஒன்று, அங்குள்ள ஒரு வீட்டின், கட்டிலில் ஆசுவாசமாக படுத்திருக்கிறது. இந்த காட்சியை அந்த வீட்டில் இருந்த துவாரம் வழியாக சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

 

— Wildlife Trust India (@wti_org_india) July 18, 2019

 

மேலும், வெள்ளத்துடன் நீண்ட நேரம் போராடியதன் காரணமாக புலி மிகுந்த களைப்புடனும், பசியுடனும் இருப்பதால் புலியை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close