கர்நாடகத்தில் ஆட்சி தொடருமா? கவிழுமா? நீடிக்கும் சஸ்பென்ஸ்....

  கிரிதரன்   | Last Modified : 18 Jul, 2019 07:18 pm
bengaluru-bjp-mlas-inside-the-state-assembly-after-the-house-was-adjourned-for-the-day

கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி, சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவிருந்தார். முன்னதாக, இதுதொடர்பான தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற போது, காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் பல்வேறு காரணங்களை கூறி, தொடர்ந்து அமலில் ஈடுபட்டனர். 

இதையடுத்து, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாது எனவும், அவை நாளைக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் சபாநாயகர் ரமேஷ் குமார் கூறினார்.

சபாநாயகரின் இந்த முடிவை கடுமையாக கண்டித்துள்ள பாஜக எம்எல்ஏ.,க்கள், அவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாததை கண்டித்தும், இதுகுறித்த ஆளுநரின் கடிதத்துக்கு சபாநாயகர் உரிய பதிலளிக்க வலியுறுத்தியும், சட்டப்பேரவைக்கு உள்ளேயே அவர்கள் தர்ணா மேற்கொண்டுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close