கர்நாடகம்: நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா?

  கிரிதரன்   | Last Modified : 21 Jul, 2019 10:10 pm
karnataka-trust-vote-will-not-happened-tomorrow-also-congress

கர்நாடக மாநில சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாது என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, கட்சி எம்எல்ஏ.,க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது தொடர்பாக விளக்கம் கோரி மனு தாக்கல் செய்துள்ளோம்.

இந்த மனுவை விசாரித்து உச்ச நீதிமன்றம் உரிய விளக்கம் அளித்த பிறகு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close