புத்தக மூட்டையை சுமக்காமல் கைவீசி வரும் மாணவர்கள்... அசத்தும் அரசுப் பள்ளிகள்!

  கிரிதரன்   | Last Modified : 23 Jul, 2019 05:25 pm
vadodara-primary-school-children-enjoy-bag-free-education

பள்ளி செல்லும் சிறுவர்கள் புத்தகப்பையை மூட்டை போல சுமந்து செல்வதை நாம் அன்றாடம்  காண்கிறோம். இவ்வளவு சின்ன வயசுல பசங்களுக்கு இவ்வளவு அதிகமா சுமையை தூக்க சொல்வது சரியா? இதனால அவங்களுக்கு படிப்பு வருதோ இல்லையோ... சீக்கிரமே முதுகு கூன் விழப்போவது மட்டும் நிச்சயம் என நம்மில் பலர் வருத்தப்படவும் செய்கிறோம்.

நமது இந்த வருத்தத்தை போக்கும் விதத்தில், குஜராத் மாநிலம், வதோதரா நகருக்கு உள்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் அசத்தல் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, அங்குள்ள அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் ஆரம்பப் பள்ளி மாணவர்கள், வீட்டிலிருந்து வகுப்பறைக்கு வரும்போது புத்தகப்பைகளை கொண்டு வர தேவையில்லை. கைவீசம்மா...கைவீசு... என ஜாலியாக வந்தால் போதும்.

வகுப்பறையிலேயே அவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. வகுப்புகள் முடிந்த பின், அவற்றை வகுப்பாசிரியரிடமே மாணவர்கள் திரும்ப அளித்திட வேண்டும். அத்துடன் கதைகள், ஆடல் மற்றும் பாடல்களுடன் பாடம் நடத்தப்படுவதால், புத்தகப்பை இல்லாத கல்வித் திட்டத்துக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

மாநில அரசின் கல்வி சீர்த்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக "நோ பேக்" திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என குஜராத் மாநில கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close